ஈசா கல்லூரி சார்பில் 11வது ஈசா சாம்பியன் டிராபி 2019

கோவை நவக்கரை சாலையில் அமைந்துள்ள ஈசா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் உடற்கல்வி துறை சார்பில் 11வது ஈசா சாம்பியன் டிராபி 2019 ஐவர் கால்பந்து போட்டி மார்ச் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

கல்லூரியின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் இப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியின் கல்லூரி தலைமை நடவடிக்கை அதிகாரி ஆதர்ஷ் தொடங்கி வைத்தார். நாக்-அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டிகள் கோவை, பாலக்காடு ஆகிய மாவட்டங்களிலிருந்தும் மொத்தம் 16 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணிகள் பங்கேற்றுள்ளனர். இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் முதல் அணிக்கு ரூபாய் ஐந்தாயிரம் பரிசுத் தொகையும், கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூபாய் மூன்றாயிரம் பரிசுத் தொகை தொகையாகவும் வழங்கப்பட்டது.

முதலாவது இடம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி பாலக்காடு, இரண்டாவது இடம் கற்பகம் கல்லூரி கோவை இதில், கல்லூரி தலைமை செயல் அதிகாரி அஜித், கல்லூரி நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த், கல்லூரி முதல்வர்.ராபர்ட் கென்னடி ஆகியோர் கலந்து கொண்டனர்.  இப்போட்டியினை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர்.செந்தில்குமார்  ஒருங்கிணைத்தார்.