ஏலம் போனது மானம்…

(டீக்கடையில் அமர்ந்திருந்த சுப்பன், அவ்வழியே நடந்துசென்ற குப்பனைப் பார்த்து..) என்னடா மானங்கெட்ட குப்பா… எங்கடா போயிட்டு இருக்க…?

குப்பன்: ஏன்டா.. சுப்பா… காலைல வம்புக்கு இழுக்கற..

சுப்பன்: நீங்க பண்ணுன வேலைலவயிறு, வாயெல்லாம் எரியுது…

குப்பன்: அப்படி என்னபண்ணிட்டோம்னுஇப்படி பேசுற? (என்று சொல்லிக் கொண்டே அவனருகில் வந்து அமர்ந்தான்.)

சுப்பன்: இனி நீயில்ல, யாரும் ஒன்னும் பண்ணறதுக்கில்ல..அதான் உண்மை வெளிச்சத்துக்கு வந்துருச்சே..

குப்பன்: எதடா சொல்ற..ஒண்ணும் விளங்கல.. தெளிவா சொல்லு..

சுப்பன்: தெளிவா வேற சொல்லணுமா… நீ ஆயிரம் வாங்கிட்டு ஓட்டுப்போட்ட..உங்ககிட்ட ஓட்ட விலைக்கு வாங்கின அமைச்சருங்க கோடிக் கணக்குல விலபோயி இருக்காங்க.. அதத்தான் சொல்ற.. புரியுதா? (இதற்கு குப்பன் என்ன சொல்வ தென்று தெரியாமல் திணறுகிறான்.)

சுப்பன்: நா..அப்பவே சொன்ன.. ஆளப்பாத்து ஓட்டுப்போடுடான்னு… நீ ஆயிரத்தபாத்து ஓட்டுப்போட்ட..உன்னோட ஆயிரத்துக்கும் ஆத்திரத்துக்கும் மூணு முதலமைச்சர் கிடைச்சாச்சு. இப்ப அமைச்சருக ¢கெல்லாம் கோடிக்கணக்கா பேரம் பேசியிருக்காங்கனு ஒருத்தரு பேசறாரு. நாடே நம்மளப் பாத்து சந்தி சிரிக்குது.

குப்பன்: அடேய்..இதெல்லாம் எதிர்க்கட்சிங்க, மத்திய அரசு பண்ற வேல.

சுப்பன்: அடேய்.. முட்டாப் பயல..ஏண்டா இவ்வளவு நடக்கறபாத்தும் உண்மை விளங்கலயா? இல்ல, வலிக்காத மாதிரியே நடிக்கறியா?

குப்பன்: டேய்.. சும்மா..வாயிக்கு வந்தத பேசதா.நீ அந்தக்கட்சிய சேர்ந்தவன் தானா.. இப்படித்தான் பேசுவ.. நீங்கமட்டும் என்ன யோக்கியமா? எவ்வளவு ஊழல் பண்ணியிருக்கீங்க. எங்கள தப்பு சொல்ற அளவுக்கு உங்களுக்கு எந்த அருகதையும் இல்ல.

சுப்பன்: அதுசரி.ஏண்டா தப்பு செய்யறீங்கனு கேட்டா..?நீ யோக்கியா மானுதிருப்பிக் கேட்கறீங்க. சரி.நீ சொல்றபடியே வரேன். அந்தக் கட்சி செஞ்சது தப்புனு தெரிஞ்சுதானா, மக்க உங்களுக்கு ஓட்டுப் போட்டாங்க. அப்ப நீங்க ஒழுங்கா உங்க வேலையச் செய்ய வேணாமா? அதவிட்டுட்டு அவங்க செஞ்ச அதேதப்ப நீங்களும் செய்யறது என்னடா நியாயம்?

குப்பன்: அட… அதாண்டா அரசியல். நல்லாக் கவனி.. தலைவருங்க என்னதான வெளில அடிச்சுகிட்டு அறிக்கை விட்டாலும் அவங்க ஊழல்லயும், தொழில்லயும் எப்படி ஒத்துமையா போறாங்களோ, அது மாதிரி நாமளும் இருந்துக்கணும். எப்படியோ நம்ம வூட்டுக்கு நல்லது நடந்தா சரி.

சுப்பன்: ஏண்டா..அப்பநாட்ட என்னபண்றது?ம்ம்ம்.. உங்களத் திருத்த முடியாது. நீங்கள்லாம் தெரிஞ்சேதான் தப்பு செய்றீங்க. நா..மாற்றத்த விரும்புற ஆளு.

குப்பன்: ஓஹோ..அவனா நீ.உங்கள மாதிரி ஆளுகளோட ஓட்டெல்லாம் செல்லாதஓட்டாத்தான போச்சு. நீயெல்லாம் பேசவேகூடாது.

சுப்பன்: ஓ.. இருக்கற ரெண்டு கட்சியவிட்டு மாத்துக்கட்சிக்கு போட்டா.. செல்லாதஓட்டா.சரி, அப்படியே இருந்துட்டு போகட்டும்.

குப்பன்: அட.. சுப்பா..ரஜினி சொல்லறமாதிரி இங்க சிஸ்டத்தையே மாத்தணும். அப்பத்தான் நீ சொல்ற தீர்வு கிடைக்கும். ஆனா அதெல்லாம் சினிமால வர்ற மாதிரி மூணு மணி நேரத்துல நடக்கற காரியமில்ல.

சுப்பன்: சரி..உங்கஎம்எல்ஏ வெல போயி இருக்காரே… அதுக்கு என்ன சொல்ற..

குப்பன்: அதான்.. தல¦வரு விளக்கம் கொடுத்துட்டாரே. அதில இருக்கறது நாந்தா.ஆனா அவங்க சொல்றமாதிரி எதுவும் நா பேசலனு. எல்லாம் ஏமாத்து வேல. யாரோ டப்பிங் கொடுத்து இருக்காங்க..

சுப்பன்: அதெப்படி..மாப்பிள நாந்தான்.. ஆனா..இந்தகல்யாணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லனுமண்டபத்துல நின்னுகிட்டு சொல்றீங்க. இதநம்பஇங்க இருக்கறவன் என்ன கோமாளியா?

குப்பன்: அப்ப நீ வந்து மாத்து. ஏன் எங்களப்பாத்து பேசிட்டு இருக்க?இங்கபடிச்சவன்லாம் அவனவன் வேலயப் பாக்க போயிட்டான்.நாட்டப் பத்தி அவன் சிந்திச்சானா.அது அவன் சுயநலம்தான. இருக்கற நாங்கஏதோ எங்களால முடிஞ்சதநாட்டுக்கு செய்யறோம்..அப்படியே நாங்களும் கொஞ்சம் எடுத்துக்கறோம்.இதுலஎன்ன தப்பு?

சுப்பன்: சூப்பர்டா… கடைசியில..இவ்வளவு தெளிவா ஆகிட்டங்க. அப்ப வெல போனது தப்பில்ல. அப்படித்தான.

குப்பன்: டேய்..அப்படியொன்னுநடக்கவேஇல்ல.

சுப்பன்: இப்படியே இருந்துக்கடா… நாடு நல்லாருக்கும். ஒருத்தரு நோட்டமாத்தற«னு சொல்லி நாட்டயே வளர்ச்சில பின்னாடி தள்ளிட்டாரு. நீங்கஇப்படியே சொத்து சேத்துட்டு, சோத்துக்கு அலைஞ்சிட்டே இருங்க. ஒரேயடியா வௌ¢ளம், பூகம்பம் வந்து உங்க எல்லாத்தையும் தூக்கிட்டு போகும்.அப்பத்தான் இந்த நாடு சுத்தமாகும்.

குப்பன்: சரி..வா. அது வரப்பவரட்டும்.ஒரு குவாட்டர் அடிப்போம்.

சுப்பன்: ம்ம்ம்..உங்கமூளய மொடக்கினதே இதுதான். அதக்குடிச்சு நீ நாசமாப்போற.நானும் அதனால நாசமாக வேண்டாம். நீ போய், அந்த விஷத்தக் குடி. நா போய் என் வேலயப் பாக்கறேன். அடேய்.. மானந்தான் ஏலத்துக்கு போயிருச்சு.. .உசிரயாவது பாத்துக்க. நா வரேன்.

– கா.அருள்