மண்ணிலா விவசாயப் பண்ணை (Aeroponics)

வேளாண் பல்கலையின் ஆதரவுடன் செயல்படும் மண்ணிலா விவசாயப் பண்ணை (Aeroponics)

“கோடக” வடிவிலான ஏரோபோனிக்ஸ் கட்டமைப்புகள், தானியங்கி பாசன முறை, சீதோஷ்ண நிலைக்கு ஏற்றாற் போல் மாறிக் கொள்ளும் தானியங்கி சூழல் ஆகியவை ஏரோபோனிக்ஸ் முறையின் சிறப்பம்சமாகும்.

இந்த ஏரோபோனிக்ஸ் முறையில் நாளொன்றுக்கு 900கிலோ காய்கறி உற்பத்தி செய்வதற்கு சுமார் 6000லிட்டர் தண்ணீரே போதுமானது.

இம்முறையின் மூலம் கேரட், பாகற்காய், காலிபிளவர், பீட்ரூட், தக்காளி,மிளகாய், கொத்தமல்லி, புதினா மற்றும் கீரை வகைகள் போன்ற அனைத்து முக்கிய காய்கறிகளும் எளிதாக பயிரிடலாம்.

மண்ணிற்கு பதிலாக நுரை பஞ்சு உபயோகிக்கப்படுகிறது. செடிகள் ஓரளவு வளர்ந்தவுடன் ஆதரவிற்காக மேலே உள்ள கம்பிகளில் கட்டப்படுகிறது.

இந்த ஏரோபோனிக்ஸ் கூடத்திற்கு, கு. இராமசாமி, துணைவேந்தர், வேளாண்மைப் பல்கலைக்கழகம்,தமிழ்நாடு S.N.A.ஜின்னா, முதன்மை பொது மேலாளர், தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற  மேம்பாட்டு வங்கி, இரா.முருகேசன்,இயக்குநர், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கம் ஆகியோர் இன்று(21.6.17) வருகை புரிந்தனர். உடன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் நபார்ட் வங்கி அதிகாரிகள்.