‘ரங்கூன்’ வெற்றியில் கெளதம் கார்த்திக்

நடிகர் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் தனது திரைப்பயணத்தில்  அடுத்தகட்டத்துக்கு செல்லக்கூடியபடமாகதற்போது வெளியாக  இருக்கும் ‘ரங்கூன்’அமைந்துள்ளது. போட்டி நிறைந்த தமிழ் திரைப்பட உலகில்  தன்னை நிரூபித்துக்கொள்ளும்  நிலையில் இருக்கும் வளரும் தலைமுறை நடிகரான கௌதமுக்கு இதுபோன்றபடங்கள் ஒரு வரப்பிரசாதம், பேர் சொல்லும் படமாகும்.

படத்தின் கதைச்சுருக்கம்: ரங்கூன் நகரத்தில் இருந்து தனது அப்பா,அம்மா,தங்கச்சியுடன் சிறு வயதில் சென்னைக்கு வருகிறார். கடலோரப் பகுதியில் இருக்கும் நபர்களுடன் அவருக்கு நட்பு ஏற்படுகிறது. இச்சமயத்தில் ஒரு விபத்தில் தனது தந்தையை அவர் இழக்க நேரிடுகிறது. சிறிது காலத்துக்கு பிறகு தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று சூழ்நிலையில், ஒரு நகைக்கடை உரிமையாளரிடம் வேலைக்குச் செல்கிறார் கௌதம்.

கள்ளத்தனமாக தங்கக் கட்டிகளை சிங்கப்பூர் இருந்து சென்னைக்குக் கொண்டு வந்து வியாபாரம் செய்யும் வேலையில் ஈடுபடுகிறார் அவர். இதனால் இக்கட்டான ஒரு பிரச்னையில் சிக்கிக்கொள்கிறார். பிறகு அதில் இருந்து எப்படி தப்பித்து தனது வாழ்க்கையைத் தொடங்குகிறார் என்பதுதான் மீதி கதை. இயக்குநர் ராஜ்குமார் பெரியசுவாமிக்கு முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நன்றாகபடத்தைக் கொண்டு சென்றிருக்கிறார்.

படம் பார்க்கும் அனைவரையும் தனது நேர்த்தியான திரைக்கதை அமைப்பால் ஒரே இடத்தில் உட்கார வைத்திருப்பது நல்லவிஷயம். ஒளிப்பதிவு அனிஸ், இவரின் ஒளிப்பதிவு கண்ணுக்குள் இருந்து நீங்காமல் இருக்கின்றது. கௌதம் கார்த்திக், சித்திக் ஆகியோரின் நடிப்பு படத்தின் யதார்த்தத்தை பதிவு செய்திருக்கிறது. மொத்தத்தில் ரங்கூன் அழகை திரையரங்கில் பார்த்து ரசிக்கலாம்.

– பாண்டியராஜ்.