கே.பி.ஆர். நிறுவனத்தில் கல்வி நாள் விழா

‘கல்வியே கண் கண்ட தெய்வம்’ என்பதற்கேட்ப ஒவ்வொரு ஆண்டும் தனது நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வியை கொடுத்து அவர்கள் தம் வாழ்வில் சிறப்புற வாழ வேண்டும் என் நினைப்பவர் கே.பி.ராமசாமி.

அதற்காக ஒவ்வொரு ஆண்டும் அதிக மதிப்பெண்கள் பெரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது கே.பி.ஆர் நிறுவனம். அதேபோல் இந்த வருடமும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் கே.பொம்மண்ணராஜா வரவேற்புரையாற்றினார்.

இந்நிறுவன தலைவர் கே.பி.ஆர். பேசுகையில்: நமது நிறுவனத்தில் சுமார் இருபதாயிராத்திற்கு மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இதில் 19,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் பனிரெண்டாம் வகுப்பில் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் முதல் மதிப்பெண் (1149) பெற்ற மாணவி மிகவும் வருத்தமடைந்தாள். காரணம் ஊக்கத்தொகையை வாங்க முடியவில்லை என்று. கவலைபடாதே நாங்கள் உனக்கு எப்போதும் உதவியாக இருப்போம் என்று கூறு அந்த ஊக்கத்தொகையினை பரிசளித்தோம். அதே போல் இந்த வருடமும் 189 பேர் தேர்வு எழுதி, முழுத் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதற்காக நான் ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அடுத்த ஆண்டு கல்விக்கான ஊக்கத்தொகை பெரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் டி.என்.சிவகுமார் பேசுகையில்: வேலை செய்து கொண்டே படிக்கும் நீங்கள் மிகப்பெரிய சாதனையாளர்கள். இந்நிறுவன தலைவர் கே.பி.ஆர். புதுவிதமான கல்விமுறையை கையாண்டு வருகிறார். வேலை பார்த்துக் கொண்டே படித்து சாதனை படைக்கும் பொழுது, மற்றவர்களால் ஏன் முடியாது என்று நிரூபித்து காட்டிருக்கிறார். இந்நிறுவனர் கே.பி.ஆர். இந்தியாவில் உள்ள தலைசிறந்த நிர்வாகத்திறன் பெற்றவர்களுள் ஒருவராக திகழ்கிறார். காசு கொடுத்து படிக்கின்ற இந்த காலத்தில் வேலை கொடுத்து படிக்க வைத்து, படிப்பதற்கான ஊக்கத்தொகையையும் வழங்கி வருகிறார் கே.பி.ஆர். அவர்கள். இந்த வாய்ப்பை நீங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கவிஞர் கவிதாசன் பேசுகையில்: கே.பி.ஆர். செய்துகொண்டிருக்கும் இக்கல்வி பணிக்கு இணை எதுவும் இல்லை. இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இறுதியாக கே.பி.ஆர். நிறுவனத் தலைவர் கே.பி.ராமசாமி அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையினை வழங்கினார்.

மேலும் அதிக மதிப்பெண்கள் பெறச் செய்த ஆசிரியர்களையும் பாராட்டினார். இவ்விழாவில் வி.நந்தகுமார் (I.R.S Joint Commissioner of Income Tax) மற்றும் கே. சோமசுந்தரம், துணைத் தலைவர் கே.பி.ஆர். மில் லிமிடெட், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.