கை தட்டல்களை அள்ளிய கோதா!

சினிமா உல கில் ஒவ்வொருவருக்கும் தனித்துவம் எப்போதும் இருந்து வரும் தருணத்தில், மலையாள சினிமாவையும் நாம் கூர்ந்து கவனிக்கும் சூழ்நிலை வந்துள்ளது.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன சிஎஸ்ஐ  படத்தின் வெற்றியைய் கொண்டாடி முடிவதற்க்குள் அடுத்த வெற்றி கொண்டு வந்து சேர்த்து விட்டது கோதா திரைப்படம்.

பெரிய நட்சத்திர பட்டாளம் இல்லாமல் கதை திரைக்கதை மட்டும் வைத்து மக்களை கவர்ந்த திரைப்படமாக உள்ளது கோதா.

பஞ்சாப் மாநிலத்தில் கட்டுப்பாடான குடும்பத்தில் வாழ்ந்து வரும் வமிகா கபி மல்யுத்ததில் பல சாதனைகளை புரிய வேண்டும் என்று எண்ணுகிறாள். ஆனால் அவர் சகோதரர் அதனை விரும்பவில்லை.

அப்பொழுது கேரள மாநிலத்தில் இருந்து டேவிடோ தாமஸ் பஞ்சாப்பில் வமிகா கபி படிக்கும் கல்லுரியில் படிக்க வருகிறார்.  இவர்கள் நடுவில் அழகான நட்பு ஏற்படுகிறது. டேவிடோ தாமஸின் தந்தை ரெஞ்சி பணிக்கர் மிக பெரிய மல்யுத்த கேப்டன் என்று வமிகா கபிக்கு தெரிய வருகிறது. சந்தற்ப சூழ்நிலை காரணமாக இவர்கள் நட்பு பிரியும் நிலை ஏற்படுகிறது. டேவிடோ தாமஸ் தன்னோட சொந்த ஊருக்கு வந்த சில நாட்களில், குடும்பத்தை தூக்கி எறிந்து விட்டு வமிகா கபி,  டேவிடோ தாமஸ்யய் பார்க்க வந்து விடுகிறார்.

மல்யுதத்தில் சாதனை படைக்க நினைக்கும் வமிகா கபிக்கு, கேப்டனாக இருக்கும் ரெஞ்சி பணிக்கர் பல பயிற்சிகளை கொடுத்து மல்லுயுத்த போட்டிக்கு தயார்பண்ணுகிறார்.

வமிகா கபி, டேவிடோ தாமஸ் காதல் வெற்றி பெற்றதா, இல்லை மல்லுயுத்த போட்டியில் பல சாதனைககளை புரிந்தாரா வமிகா கபி என்பதை நகைச்சுவையாக சொல்லி இருக்கும் படம்தான் கோதா.

தமிழ் நடிகர் பாலா சரவணன் தமிழனாக நடித்திருப்பது படத்தின் மிக பக்க பலமாக உள்ளது. ரெஞ்சி பணிக்கர் யின் இயல்பான நடிப்பு எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது என்று சொல்லலாம்.

டேவிடோ தாமஸ் மாட்டு இறைச்சி எங்கள் நாட்டில் முக்கியமான உணர்வு என்று சொல்லும் காட்சியில் திரை அரங்கத்தில் கை தடல்களும் விசில்களும் பறக்கின்றது.

கோதா படத்தை இந்த அளவுக்கு எல்லாத்தையும் ரசிக்க வைத்த இயக்குனர் பாஷில் ஜோசப், ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மா,  இசை அமைப்பாளர் ஷான் ரஹ்மானுக்கு நாம் பல பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும்.

குடும்பத்துடன் இரண்டு மணி நேரம் சந்தோஷமாக பார்க்க வேண்டிய படமாக கோதா என்று ஆணித்தரமாக சொல்லலாம். நல்ல படங்கள் மொழிகளை தாண்டி வெற்றி அடையும்.