எட்டு வயது சிறுவனின் ஆண்டு வருமானம் ரூ.155 கோடி!!!

யுடியூப்பில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை விமர்சனம் செய்யும் 8 வயது சிறுவன், ஆண்டுக்கு 155 கோடி ரூபாய் வருமானத்துடன் போர்ப்ஸ் பட்டியலில் முதலிடம் பிடித்தான். அமெரிக்காவைச் சேர்ந்த ரியான் என்ற சிறுவன், பெற்றோர் உதவியுடன் கடந்த 2015ஆம் ஆண்டு ரியான் டாய்ஸ் ரிவியூவ் (Ryan Toys Review) என்ற யூடியூப் சேனலை உருவாக்கினான். அதில் குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்களை விமர்சனம் செய்ததன் மூலம் ரியான் பிரபலம் ஆனான். இந்த சேனலை இதுவரை ஒருகோடியே 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இதன்மூலம் 2017-2018ஆம் ஆண்டில் வரிக்கு முந்தைய வருமானமாக 155 கோடி ரூபாயை ஈட்டியுள்ள ரியான், யுடியூப்பில் அதிகம் சம்பாதிப்போருக்கான போர்ப்ஸ் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளான்.