தமிழ் இலக்கியங்களில் சமயமும் சமூகமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, திருப்பத்தூர் திருநெறித் திருமன்றம், மலையாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை, இலங்கை கொழும்புத் தமிழ்ச் சங்கம், ஆஸ்திரேலியா தமிழ் வளர்ச்சி மன்றம் , சுப்புரெட்டியார் 100 கல்வி அறக்கட்டளை , நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், ஆறுச்சாமி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து  தமிழ் இலக்கியங்களில் சமயமும், சமூகமும் என்ற தலைப்பில் பன்னாட்டு ஆய்வு கருத்தரங்கம் கோவையில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தலைவர் ஆறுச்சாமி, செயலர் மற்றும் இயக்குனர் வாசுகி மற்றும் கல்லூரியின் முதல்வர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடக்க விழா நிகழ்ச்சியில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் முருகேசன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஆய்வுக் கோவைகள் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ஆய்வுக்கோவை தொகுதி- 1 , தொகுதி – 2 , தொகுதி – 3 ல் இடம்பெற்று உள்ள கட்டுரைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பல்கலைக் கழகங்களில் இருந்து பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.